விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன், தமிழக வேளாண் பட்ஜெட் 2025-26
சட்டப்பேரவையில்
2025-26-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.17,000
கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.160 கோடியில் சிறப்பு தொகுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மொத்தத்தில் வேளாண் துறைக்கு ரூ.45,661
கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.