தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ்.'மின்னலே' படத்தில் தொடங்கி 'காப்பான்' திரைப்படம் வரை தனது தனித்துவமான இசை மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
இவர் தனது வீட்டில் 7 ஆண்டுகளாக வேலை பார்க்கும் பெண்ணின் பிறந்தநாளை தனது குடும்பத்தோடு கொண்டாடியாதாக கூறி அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் 'லக்ஷ்மியின் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடினோம்.கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் ' என கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், இத்தனை மனம் படைத்த நீ தான் கடவுள் என தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.