பிரதமர் வீட்டில் தீ

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று இரவு சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில், பிரதமரின் இல்லம் அமைந்துள்ளது. இரவு 7.25 மணி அளவில் இந்த இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் இல்லத்தில்  சிறிய அளவில்தான் தீ விபத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, பிரதமரின் இல்லம் என்பதால்தான், 9 வண்டிகளில் வீரர்கள் அவசரமாக விரைய நேரிட்டது, மற்றபடி அச்சப்பட தேவையில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.