மனை உட்பிரிவு பணிக்கு தனியார் சர்வேயர்கள் நியமனம் .

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் மனைகளை உட்பிரிவு செய்து பட்டா வாங்க பொதுமக்கள் மிகவும் சிறமப் படுகின்றார்கள். சில தாலுக்காவில் ஒரு வருடம் கூட ஆகிவிடுகிறது காரணம் இந்த இடங்களில் போதிய அரசு சர்வேயர் கள் இல்லாதது தான், எனவேமனைகளின் உட்பிரிவு செய்யும் பணிக்கு உ ரிமம் பெற்ற தகுதியுடைய தனியார் சர்வேயர்களை மாதம் இருபதாயிரம் சம்பளத்தின் அடிப்படையில் பணியமர்த்த நில அளவை துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இவர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்றால் அவர்கள் இப்பணியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.